சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆன ஷாருக்கான் பட ஒளிப்பதிவாளர்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:43 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக சிங்கப்பாதை என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே அவர் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு சிங்கபாதை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இம்மாதம் இறுதியில் டான் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அடுத்த மாதம் சிங்கப்பாதை படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒளிப்பதிவாளரான டட்லி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்