பிரபுதேவா படத்திற்கு டான்ஸ் மாஸ்டராகும் ராஜூ சுந்தரம்!

ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (18:15 IST)
பிரபுதேவா படத்திற்கு டான்ஸ் மாஸ்டராகும் ராஜூ சுந்தரம்!
பிரபுதேவா மற்றும் ராஜூ சுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர் 
 
பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பாஹீரா. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ராஜசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் இந்த பாடல் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரபுதேவா ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடிக்கும் இந்த படத்தில் கோபிநாத் ரவி, சாக்சி அகர்வால், ஜனனி அய்யர், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கணேசன் சேகர் என்பவர் இசை அமைத்து வருகிறார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்