சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ டீசர்: முழுக்க முழுக்க ஆக்சன்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:48 IST)
சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ டீசர்: முழுக்க முழுக்க ஆக்சன்!
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் பிசியாகி வருகிறார் 
 
அவர் நடித்து வரும் ‘ஆச்சார்யா’ என்ற திரைப்படத்தை கொரடலா சிவா இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க இது ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதை இந்த டீசரில் இருந்து தெரிந்து கொள்வது போல் உள்ளது 
 
ஒரு நிமிடம் 7 வினாடிகள் உள்ள இந்த டீசரில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுமே ஆக்ஷன் காட்சிகள் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் சிரஞ்சீவி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்