இன்று முதல் ஓய்வு எடுக்கும் கமல்ஹாசன் இன்னும் ஒருசில நாட்களில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும், அவரது அடுத்தகட்ட பிரச்சார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் Aarkkariyam என்ற மலையாள படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார். பிஜு மேனன் பார்வதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜான் வர்கீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது