புட்டபொம்மா, ரௌடி பேபிலாம் ஓரம் போங்க..! – டஃப் குடுக்கும் செல்லம்மா க்ளிம்ப்ஸ்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:10 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் “செல்லம்மா செல்லம்மா” பாடல் முன்னதாக வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்த பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புட்டபொம்மா, ரௌடி பேபி பாடல்களுக்கு இணையாக செட் மற்றும் டான்ஸ் ஆகியவை உள்ளதால் அந்த பாடல்களுக்கு நிகராக இதுவும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்