சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (13:25 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் காஷ்மீரில் தொடங்கியது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை.

இப்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் போஸ் ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்