கமல்- ஹெச்.வினோத் கூட்டணிக்கு வாழ்த்துகள் கூறிய அஜித் பட இயக்குனர்

செவ்வாய், 4 ஜூலை 2023 (22:05 IST)
கமல் - வினோத் கூட்டணிக்கு  அஜித்தின் விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி கமல்ஹாசனுக்கும், வினோத்திற்கும்  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இன்று, ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘’கமல்ஹாசன் மற்றும்  ஆர். மகேந்திரன் தயாரிப்பில், , இயக்குனர் ஹெச்.வினோத்  எழுதி, இயக்கவுள்ள  ‘’கமல்233’’ படத்தில்  கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறுதி செய்துள்ளது.

இந்த   நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் வினோத் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’கனவு மெய்யானது ‘’என்று கூறி   ‘’நன்றி ஆண்டவரே’’ என்று பதிவிட்டுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமல் - வினோத் கூட்டணிக்கு  அஜித்தின் விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி கமல்ஹாசனுக்கும், வினோத்திற்கும்  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள் வினோத். & My Dear @ikamalhaasan sir❤ #KH233 https://t.co/aOLUzXOtg3

— Magizh Thirumeni (@MagizhDiroffl) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்