தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து நடிகர் ஜீவா நடிப்பில் இன்று வெளியாவதாக இருந்த பிளாக் திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கோயம்புத்தூரை சேர்ந்த சுப்பையா என்பவர் ஐந்து கோடி ரூபாய் விலை பேசி படத்தை ஒப்பந்தம் செய்திருந்தார்.
படம் இன்று வெளியாக உள்ள நிலையில் 2 கோடி 75 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி பணம் தன்னிடம் இல்லை கூறிவிட்டார்.
இதனால் படத்தை வெளியிடலாமா வேண்டாமா என தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆலோசனை செய்து வருகிறார்.
இதே விநியோகஸ்தர் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்தை இரண்டு கோடியே 10 லட்சம் என விலை பேசிவிட்டு படம் வெளியிட்டிற்கு முதல் நாள் தன்னிடம் ஒரு ஒரு கோடியே 60 லட்சம் தான் இருக்கிறது மீதமுள்ள 50 லட்சம் என்னிடம் இல்லை என கை விரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.