தீபாவளி கொண்டாட்டம்: பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா கண்ணீர்

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (13:26 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடி வரும் நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் அவரவர்களுக்கு பிடித்த உணவை அனுப்பியுள்ள நிலையில் அந்த உணவுகளைப் பார்த்து பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நிகழ்ச்சியுடன் கண்ணீர் சிந்தும் காட்சிகள் உள்ளன 
 
குறிப்பாக பிரியங்கா தனது அம்மா அனுப்பிய உணவை பார்த்ததும் நன்றி அம்மா என கண்ணீர் சிந்துகிறார். அதேபோல் ராஜு ஜெயமோகனின் வீட்டிலிருந்து முட்டை பிரியாணி மற்றும் வஞ்சிர மீன் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினர் அனுப்பிய உணவுகளை ருசித்து தீபாவளியைக் கொண்டாடும் காட்சிகள் இன்றைய புரொமோ வீடியோவில் உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்