அமாவாசையில் வரும் தீபாவளி திருநாளின் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா...?

தீபாவளித் திருநாளின் போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்டிகையின் தாத்பர்யமும் இதுதான்.

தீபாவளி வைபவத்திருநாளில், காலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து குளிப்பார்கள் மக்கள். குளித்துவிட்டு வந்து, புத்தாடை அணிந்துகொண்டு, இறைவனை வணங்குவார்கள். பின்னர், வீட்டிலுள்ள பெரியோரை வணங்குவார்கள். அதையடுத்து, பட்டாசுகள் வெடித்து, அக்கம்பக்கத்தாருடனும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.
 
தீபாவளிக்கு முன் தினம் சதுர்த்தி தினத்தில் தீபாவளி கொண்டாடுவார்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள், நல்ல  எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து, குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு பின்பு, சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வெந்நீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெய்யைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும், வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
6 மணிக்கு முன்பு குளிக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. 6 மணிக்கு  பிறகு   குளிப்பதாக   இருந்தால்   வெந்நீர்  பயன்படுத்தக்கூடாது;  வெந்நீருக்கு  பதில் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
அமாவாசை தினத்தில் தீபாவளி கொண்டாடுவார்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும்  உடலிலும்   தேய்த்து   குறைந்தபட்சம் 15  நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்