இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெண்டு வீடு… ப்ரோமோவை பகிர்ந்த கமல்ஹாசன்!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரேகா நாயர், பப்ளு பிரித்விராஜ், பயில்வான் ரங்கநாதன், மாகாபா ஆனந்த், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்  மற்றும் இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்