பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகரின் மகள்!

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:49 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரேகா நாயர், பப்ளு பிரித்விராஜ், பயில்வான் ரங்கநாதன், மாகாபா ஆனந்த், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திரஜா பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்