"வேற என்ன வெட்டி முறிக்குற வேல இருக்கு உனக்கு" - சாண்டியை திட்டிய வனிதா!

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் ஷெரின் மற்றும் வனிதாவின் சண்டை விவகாரத்தை பற்றி ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்று கூடி பேசுகின்றனர். 


 
இந்த வாரத்திற்கான Best Performer Person யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலந்தோசிக்கின்றனர். இதில் ஷெரின் தான் கடந்த இரண்டு நாட்களாக கொடுக்கப்பட்ட டாஸ்கில் என்னுடைய 100% கவனம் இருந்தது என்று சொல்லி முடிப்பதற்குள் வனிதா கிடையாது... என்று கூறி குறுக்கிடுகிறார். பின்னர் தர்ஷன் முதலில் பேசவிடுங்க...நாங்க என்ன சொல்ல வருகிறோம் என்றே உங்களுக்கு தெரியாது அதுக்குள்ள ஸ்டாப் பண்ணுறீங்க என்று கூறி ஷெரின் தான் எல்லோரையும் விட டாஸ்கை சிறப்பாக செய்து முடித்தார் என்று கூறுகிறார். 
 
சரி.. இத எதுக்கு இப்போ எல்லாரையும் கூப்பிட்டு வந்து பேசுறீங்க என்று சாண்டி வனிதாவிடம் கேட்கிறார். அதற்கு வனிதா.. உங்களுக்கு வேற எதாவது வெட்டி முறிக்குற வேலை இருக்கா? என்று பதிலுக்கு கேட்கிறார்.  உடனே சேரன் கோபப்பட்டு எவ்வளவு நேரம் கேட்பது முட்டாள் மாதிரி உட்கார்ந்திட்டு இருக்கிறோம் வனிதா என்று கூறி கத்துகிறார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்