இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினியையும் கமலையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
16 வயதினிலே படம் மூலம் ரஜினி, கமலை இணைந்து நடிக்க வைத்தவர் பாரதிராஜா. கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார். சமீப கால அரசியல் நிகழ்வுகளை கடுமையாக சாடி வரும் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கும் முடிவில் இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியலில் இருந்து நான் மொத்தமாக ஒதுங்கிவிட்டேன். நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினராக இல்லை. தொடர்ந்து படங்களை இயக்குவதையே விரும்புகிறேன். கமல் ஒத்துக்கொண்டால், அவரை வைத்து இயக்கத் தயாராக இருக்கிறேன். அதேபோல் ரஜினியை வைத்து படம் இயக்கவும் தயாராக இருக்கிறேன். நல்ல நல்ல படங்களைக் கொடுக்கவேண்டும் என்பதே என் ஆசை.