ஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (14:17 IST)
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார் கெளதம் கார்த்திக். 
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. அடல்ட் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த இந்தப் படம், வசூலை வாரிக் குவித்தது.
 
எனவே, மறுபடியும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் நடித்தார் கெளதம் கார்த்திக். இந்தப் படத்தையும்  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தது. இதுவும் வசூலில் குறை வைக்கவில்லை.
இப்படி அடுத்தடுத்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படங்களில் நடித்துள்ள கெளதம் கார்த்திக், அடுத்ததாகவும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பிலேயே நடிக்க இருக்கிறார். ‘கொம்பன்’, ‘மருது’ படங்களை இயக்கிய முத்தையா, இந்தப் படத்தை இயக்குகிறார். கெளதம் கார்த்தியுடன் இணைந்து சூரி முக்கிய  வேடத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்