கார்த்திக் படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை

புதன், 25 ஏப்ரல் 2018 (12:14 IST)
கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

 
 
‘திரு’ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், கெளதம் கார்த்திக் இருவரும் முதன்முறையாக இணைந்து அப்பா – மகனாகவே நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக ரெஜினா நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’புகழ் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 
 
இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சினமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் மிஸ்டர் சந்திரமெளலி என்ற பாடலை நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கின் தங்கை பிருந்தா பாடியுள்ளார். இதன்மூலம் அவர் தமிழ் சினிமாவில் பாடகியாகி அறிமுகாமகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்