‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

வியாழன், 22 மார்ச் 2018 (14:12 IST)
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.


 
‘ஹரஹர மஹாதேவஹி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்திலும் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு டிசைனிலேயே ஏகப்பட்ட ‘ஏ’ சமாச்சாரங்கள் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஒரு மணி நேரம், 58 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாராகியுள்ளது இந்தப் படம். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்