பீஸ்ட் அப்டேட் வரும்… ஆனா இப்போ இல்ல – நெல்சன் திலிப்குமார்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:08 IST)
நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு நாட்களே உள்ளன.

நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படத்துக்குப் பின் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படம் ஒரு வருட தாமதத்துக்குப் பின்னர் வரும் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது நெல்சன் திலிப் குமார் பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டார். அதற்கு நெல்சன் ‘டாக்டர் படம் ரிலீஸான பின்னரே பீஸ்ட் படத்தின் அப்டேட் வரும் ‘ எனக் கூறியுள்ளார். நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு மற்றும் செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்