அதே போல நிஷாவும் தன் கணவர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக விசாரிக்க போலிஸார் வித்யாகுமாரை அழைத்துள்ளனர். அவர் வெளியே இருப்பதாக சொல்லியுள்ளார். இதனால் அவரின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வித்யாகுமார் தன்னுடைய குடோனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலை சம்மந்தமாக செல்போனில் பேசி வீடியோ ஆதாரம் வெளியிட்ட பின்னரே தற்கொலை செய்துகொண்டார். மரணமடைந்த வித்யாகுமார் திமுகவில் வார்டு அளவில் பொறுப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.