விஜய்யின் ‘பீஸ்ட்’ ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (18:43 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் கசிந்துள்ளது
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்து உள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்சார் தகவலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சென்சார் தகவலுடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அல்லது நாளை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்