ஜாலியோ ஜிம்கானா வந்தா என்ன? சாதனைப் படைத்த அரபிக்குத்து!

திங்கள், 21 மார்ச் 2022 (10:54 IST)
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது. இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்தது. இந்நிலையில் நேற்று இந்த பாடல் 200  மில்லியன்(20 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதே போல கடந்த வாரம் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த பாடலும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்