இன்று பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்? – அனிருத் போட்ட ட்வீட்!

சனி, 19 மார்ச் 2022 (09:45 IST)
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனிருத் போட்ட ட்வீட் வைரலாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான “அரபி குத்து” பாடல் வெளியாகி பெரும் ட்ரெண்டானது.

சில நாட்கள் முன்னதாக பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத் இது ஜாலியோ ஜிம்கானா டே என்று பதிவிட்டுள்ளார். இதனால் இன்று செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்