பகாசூரன் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (14:53 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி களத்தில்  இறங்கி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டினார். இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படம் வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்