கிராமத்து கதைக்களத்தில் அருள்நிதி நடிக்கும் ‘கழுவேர்த்தி மூர்க்கன்’- மிரட்டலான போஸ்டர்!

வெள்ளி, 17 மார்ச் 2023 (08:29 IST)
வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவான டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. ஆனால் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

சமீபத்தில் ரிலீஸான அவரின் படங்கள் எதுவும் திரையரங்கில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ராட்சசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமராஜ் இயக்கத்தில் ‘கழுவேர்த்தி மூர்க்கன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்