'பாகுபலி 2' படத்திற்கு தமிழகத்தில் தடையா? சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (05:02 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பிரமாண்டமான திரைப்படம் 'பாகுபலி 2' வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் தடை செய்ய முடியாது என்று நேற்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.



 


இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்த்தின் மீது ஏசிஇ என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 18 லட்சம் கடன் தரவேண்டியதுள்ளதாகவும், இந்த பணத்தை பாகுபலி 2' படத்தின் ரிலீசுக்கு முன்னர் தருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தர மறுப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'பாகுபலி 2' படத்திற்கு இந்த கடனுக்கும் சம்பந்தம் இல்லாததால் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அடுத்த கட்டுரையில்