வேறொரு பெண்ணுடன் தொடர்பு... கணவரை விவாகரத்து செய்யும் அசின்?

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:08 IST)
தமிழில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை அசின், பாலிவுட் கனவு கண்ணியாக வேண்டும் என்று மும்பை சென்றார். ஆனால் அவர் நினைத்தது போல் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு பணக்கார மாப்பிள்ளை ராகுல் சர்மாவே கிடைத்தார்.
 
பிரபல இந்தி நடிகரான அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை அசின் விமான நிலையத்தில் தான் முதன் முதலில் சந்தித்தாராம். ஆம், ஹவுஸ்புல் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக,   நடிகர் அக்‌ஷய்குமாரோடு வெளிநாடு சென்ற அசின் அங்கு ராகுல் சர்மா பார்த்துள்ளார். ராகுல் சர்மாவுக்கு உடனே காதல் வர பின்னர் அசினின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் 2016ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஆரின் என்ற 6 வயது மகள் இருக்கிறார். 
 
இந்நிலையில் அசினுக்கும் அவரது கணவர் ராகுல் ஷர்மாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். ஆம், ராகுல் ஷர்மா வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அசினுக்கு தெரிய வர இப்போது கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறாராம்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்