இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் ஒருவர் மணிரத்னம். வசனம் மற்றும் அதை உச்சரிக்கும் விதம், காட்சி போன்றவைகள் அவர் படத்திற்கு தனி சிறப்புகள் உண்டு. ஹீரோக்களுக்காக படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இயக்குநருக்கான படம் பார்த்த ரசிகர்கள் இருந்தது மணிரதனத்துக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் படத்து முடித்த பின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் திரைப்பட இயக்குனர் ஆனார். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப்பட நடிகை சுஹாசினியை 1988 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.
மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சுஹாசினி சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நான் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொள்ளும்போது ஒரு மிகப்பெரிய பிரபலமான நடிகையாக இருந்தேன். ஆனால் அவர் அப்படி இல்லை. ஒன்றிரண்டு படங்களை மட்டும் தான் இயக்கியிருந்தார். அவரிடம் வெறும் 15000 மட்டுமே இருந்தது . எல்லோரும் ஏன் அவரை திருமணம் செய்யணும்? என கேட்டார்கள் கொஞ்சம் ஆணவம் கலந்த திமிருடன் பேசியுள்ளார்.