கும்பகோணத்தில் பெண் பார்த்த ஆர்யா

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (15:41 IST)
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்காக கும்பகோணத்தில் பெண் பார்த்துள்ளார் ஆர்யா. 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் இதுவரை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தற்போது சென்னை திரும்பி, ஒவ்வொரு போட்டியாளரின் வீட்டுக்கும் சென்று ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், கும்பகோணத்தைச் சேர்ந்த போட்டியாளரான அபர்ணாதி வீட்டுக்கு சமீபத்தில் சென்றுள்ளார் ஆர்யா. பெண் பார்க்கும் வைபவம் அங்கு நடைபெற்றது. பின்னர், குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். ஏற்கெனவே அபர்ணாதி வீட்டில் ஷூட்டிங் நடத்த, அங்குள்ள பெண்ணிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்