சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த காமெடி நடிகர்

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (14:55 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், காமெடி நடிகர் ஒருவர் கமிட்டாகியுள்ளார். 
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில், காமெடி நடிகர் கருணாகரன் கமிட்டாகியுள்ளார். ‘இன்று நேற்று நாளை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்