மார்க் ஆண்டனி தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஆர்யா… பூஜையுடன் தொடக்கம்!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:05 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி சோலாவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இவர் ஆர் ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கியவர்.

இந்த படத்துக்கான கதையை லூசிபர் படத்தின் எழுத்தாளரான முரளி கோபி எழுதுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு நேற்று தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்