பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறாரா ஆர்யா?

vinoth

புதன், 5 ஜூன் 2024 (07:45 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படம் ஜூலை மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆர்யா, பா ரஞ்சித் கூட்டணியில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அதற்கான இரண்டாம் பாகத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னால் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்