ஆர்யா முத்தையா படம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம்… இதுதான் காரணமா?

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (09:16 IST)
இயக்குனர் முத்தையா விருமன் திரைப்படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இதையடுத்து அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் சில நாட்கள் தாமதமாகியுள்ளதாம். இந்த படம் தென் தமிழக நகரமான கோவில்பட்டியை மையமாகக் கொண்டு உருவாகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்