அருண்விஜய்யின் ‘யானை’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:26 IST)
அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
‘யானை’ படத்தின் பட்ஜெட் 18 கோடி என்ற நிலையில் உலகம் முழுவதும் இந்தப் படம் 36 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிபெற்ற ‘யானை’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது
 
ஜீ தமிழ் ஓடிடியில் ‘யானை’ படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் ஜீ தமிழ் ஓடிடியில் பார்த்து மகிழலாம் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 59 நாட்கள் கழித்து தற்போது ஓடிடியில் ‘யானை’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்