அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த தமிழ் நடிகர்: வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (11:30 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவரை பிரபல தமிழ் நடிகர் ஒருவர் சந்தித்துள்ளார்
 
அமெரிக்கா சென்றுள்ள ஏ ஆர் ரகுமான் இசை பணிகளை கவனித்துக் கொண்டே பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்னணியில் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியன் ஏஆர் ரகுமான் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நடிகர் நெப்போலியன் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!
அதே அன்பான உபசரிப்பு…!
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்