வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் அருண்விஜய்?

வெள்ளி, 15 ஜூலை 2022 (19:12 IST)
வெங்கட் பிரபு இயக்கி வரும் அடுத்த படத்தில் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு நடிகர் அருண்விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
சமீபத்தில் யானை என்ற வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசை அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்