டேய் நீ பெரிய அப்பாடக்கரா?... மிஷ்கினின் முகம்சுளிக்கும் பேச்சை தைரியமாகக் கண்டித்த முதல் நபர்!

vinoth
வியாழன், 23 ஜனவரி 2025 (14:10 IST)
தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் அவர் செய்யும் சில கிறுக்குத் தனங்கள்தான் அவர் மேல் விமர்சனங்கள் எழ காரணமாக அமைகின்றன. சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார்.

இந்நிலையில் அந்த பேச்சை முதல்முறையாக சினிமாவை சேர்ந்த நடிகர் அருள்தாஸ் கண்டித்துள்ளார். நேற்று நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அருள்தாஸ் “எவ்வளவோ உலக இலக்கியங்கள் மற்றும் உலக சினிமா பார்ப்பதாக மிஷ்கின் சொல்கிறார். ஆனால் ஒரு மேடை நாகரிகம் தெரியாதா? சில வார்த்தைகளை நாம் மேடையில் பேசக் கூடாது. வேறு எங்கு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? உலக சினிமாவைப் பார்த்து காப்பியடிக்கும் போலி அறிவாளிதான் மிஷ்கின்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்