கல்கி படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருந்தார்… பாலிவுட் நடிகர் விமர்சனம்!

vinoth
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:32 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் ப்ரைம் வீடியோவில் இந்த படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தியில் அதே தேதியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் பாலிவுட் நடிகரான அர்ஷத் வார்ஸி, கல்கி படம் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் “நான் மேட் மேக்ஸ் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவர்கள் ஏன் புரியாத விஷயங்களை எல்லாம் போட்டு குழப்பி வைத்திருக்கிறார்கள். பிரபாஸைப் பற்றி என்ன சொல்வது? அவர் படத்தில் ஒரு ஜோக்கர் போல காணப்பட்டார்” எனப் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்