உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி.. மாநகராட்சி தொகுதி கேட்கும் கமல் கட்சி..!

Mahendran

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (13:29 IST)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொகுதியே வாங்காமல் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த கமல் கட்சி, விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி தொகுதிகள் உட்பட சில தொகுதிகளை கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கமல்ஹாசன் சில தேர்தலை தனித்து நின்று சந்தித்தார். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் அவருக்கு ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் விரைவில் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநகராட்சி , நகராட்சி உள்ளிட்ட சில தொகுதிகளை கேட்க இருப்பதாகவும் தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் குறித்த பட்டியல் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்டு பெற வேண்டிய தொகுதிகள் குறித்த பட்டியல் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்