நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (14:45 IST)
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள விருந்து என்ற திரைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தாமர கண்ணன் இயக்கியுள்ளார். நெய்யார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்