அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும் விஜய் பட தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (14:35 IST)
இயக்குனர் வசந்தபாலன் அங்காடித் தெரு மற்றும் வெயில் போன்ற தரமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய அரவான், காவியத்தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது. இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தெலுங்கில் ப்ளட் அண்ட் சாக்லேட் என்ற பெயரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு வெளியிட உள்ளார். இதற்கான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்