கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

vinoth

வெள்ளி, 5 ஜூலை 2024 (15:16 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது கோட் படத்தின் திரையரங்க விநியோக வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. படத்தைத் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல கர்நாடக ரிலீஸ் உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. கேரள விநியோக உரிமையை கோகுலம் பிலிம்ஸ் கோபாலன் கைப்பற்றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்