இயக்குனராகும் அரவிந்த் சாமி?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (20:15 IST)
வில்லன், ஹீரோ என கலக்கிவரும் அரவிந்த் சாமி, இயக்குனராகப் போகிறார் என்றொரு தகவல் உலா வருகிறது.


 
 
ஹீரோவாக நடித்தபோது பெண்களின் ஆதர்ச நாயகனாக இருந்த அரவிந்த் சாமி, ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒதுங்கினார். ‘தளபதி’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னம், மறுபடியும் ‘கடல்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அரவிந்த் சாமியின் ரீஎண்ட்ரி, அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
 
வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்துவரும் அரவிந்த் சாமியிடம், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்