கொரோனா வைரஸ் எதிரொலி: ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (21:12 IST)
கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் பிரமுகர் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அதேபோல் ஐபிஎல் போட்டி முதல் ஒலிம்பிக் போட்டி வரை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை தென் அமெரிக்கா உள்பட எந்த ஒரு சுற்றுப் சுற்றுப்பயணமும் இல்லை என்றும் அனைத்தையும் ரத்து செய்வதாகவும் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டாலும் நாம் அனைவரும் இசையால் இணைவோம் என்று தெரிவித்த ஏஆர் ரஹ்மான், உங்கள் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் உடல்நலத்திற்காகவும் நான் ஆண்டவனை பிரார்த்தனை கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஏஆர் ரஹ்மான் அவர்களின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்