இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சைக்காக முதல் மருத்துவமனையை அமைக்கும் மாநிலம் !

வியாழன், 26 மார்ச் 2020 (20:49 IST)
கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலேயே முதல் மருத்துவமனையை அமைக்கும் மாநிலம் !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  உலகம் முழுவதும் இதுவரை 489399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த நோயால் சுமார் 22149 பேர் பலியாகியுள்ளனர்.   இந்தியாவில் 716 பேர் பாதிக்கப்பட்டு அதில் 14 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் மொத்தம்  209284  பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

2464 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், 13727 பேருக்கு தனிமை வார்டுகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 284 பேர் மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 1039 பேருக்கு கொரோனா மாதிரிகள் சோதிகப்பட்டுள்ளதாகவும், அதில் 23 பேருக்கு உறுதி எனவு, இதில் ஒருவர் குணமடைந்தது போக, 933 பேருக்கு கொரொனா பாதிப்பு இல்லை , 80 பேருக்கு சோதனை முடிவு வராதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது.

இதில் நேற்று தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை 8 வது கொரோனா ஆய்வக மையமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், , முதல்வர் நவீன் பட்நாயக் ஆளும் ஒடிசா மாநிலத்தில், கொரோனாவுக்கு முதல் மருத்துவமனை கட்டமைக்கபடவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை அமைக்க உள்ளது  ஒடிசா அரசு.

இதுகுறித்து அம்மாநில அரசு கூறியுள்ளதாவது, 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை இன்னும் 2 வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அறித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்