8 ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் இணையும் இயக்குனர்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:39 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற இப்போது நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் முருகதாஸ் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இரு தரப்பும் மறுத்தது.

அதே போல விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரோடும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது முருகதாஸும் சூர்யாவும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். இருவரும் இதற்கு முன்னர் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்