பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பேமஸ் ஆனார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அனிதா தற்போது கணவருடன் சேர்த்து வெகேஷன் சென்ற போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.