ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (16:38 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இதையடுத்து ஷாருக் கான் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார். ஏற்கனவே சுஹானா நெட்பிளிக்ஸில் வெளியான “தி ஆர்ச்சீவ்ஸ்” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஷாருக் கானின் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்து பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்