முன்றாவது முறையாக அட்லி படத்தில் இணையும் முன்னணி நடிகை?

vinoth

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:10 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்