அமீர் வெற்றிமாறன் இணையும் இறைவன் மிகப்பெரியவன் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (06:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர், தற்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த வடசென்னை, மாறன் ஆகிய திரைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் இப்போது அமீர் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமாக மாயவலை உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படும் நிலையில், இப்போது அமீர் இயக்கும் இன்னொரு படமான ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறனும், அவரின் நண்பரான தங்கமும் இணைந்து எழுதியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் 70 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளதாக முன்னர் இயக்குனர் அமீர் தெரிவித்திருந்தார். இந்த படம் 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்