தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் டைட்டில் அறிவிப்பு…!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (06:52 IST)
தனுஷ் தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையடுத்து தனுஷ் மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக அறிமுகமாக, தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டிலாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற பழைய பாடல் வரி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘வருவதும் காதல் போறதும் காதல்’ என்று சப் டைட்டிலாகவும் வைக்கப்பட்டுள்ளது. டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்